இலங்கை தேசிய மனித உரிமைகள் திட்டம் LGBTIQ க்கான குறைந்த பாதுகாப்பு

இலங்கை அரசாங்கத்தின் தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தின் பிரதிபலிப்பாக, இது நேற்று வெளியிடப்பட்டது (நவம்பர் 2, 2017), Rosanna Flamer-Caldera, EQUAL GROUND இன் நிர்வாக இயக்குனர், கூறினார்: “இலங்கையின் குடிமக்களுக்கான மனித உரிமைகள் பாதுகாப்புக்கான முன்னேற்றத்தை நாம் வரவேற்கின்றோம். குறிப்பாக அவர்களின் பாலின அடையாளத்தின் விளைவாக, பாரபட்சமின்றி பாதுகாப்பதற்காக எமது அரசாங்கத்தின் கடமைகளை நாம் பாராட்டுகின்றோம். அனைத்து இலங்கையர்களுக்கும் ஒடுக்குமுறை, வன்முறை அல்லது பாகுபாடு என்பவற்றால் அச்சமின்றி தங்கள் வாழ்வை வாழ சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். என்று, “EQUAL GROUND”, நாங்கள் நம்புகிறோம்.Continue reading இலங்கை தேசிய மனித உரிமைகள் திட்டம் LGBTIQ க்கான குறைந்த பாதுகாப்பு

Zonta Women of Achievement 2017 – சமூக தாக்கத்திற்கான விருது LGBTIQ சமூகத்தை அங்கீகரித்து இனங்காணல்

EQUAL GROUND அமைப்பானது எமது நிர்வாக இயக்குனரான ரோசனா பிளேமர் கல்தேர (Rosanna Flamer-Caldera) சமூக தாக்கத்திற்கான Zonta சாதனைக்கான பெண்கள் விருதை 17 செப்டம்பர் 2017 ஆம் திகதி ஞாயிறு இரவு சின்மோனன் கிராண்ட் ஹோட்டலில் (Cinnamon Grand Hotel) பெற்றார் என்பதை அறிவிப்பதில் பெருமையடைகின்றது. 1985 ஆம் ஆண்டிலிருந்து, கொழும்பிலுள்ள ஸொன்தா குழு 1 (Zonta Club 1) ஆனது, தமது துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் தேசிய முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்துள்ள பெண்களை சிறப்பித்து கொண்டாடுகின்றது.

ம.வி.மு (பா.உ) நலிந்த ஜயதிஸ்ஸ சமபாலீர்ப்பு மீது கொண்ட வெறுப்புணர்வு

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் ஓர் நேர்காணலில் ‘‘நான் முற்றிலும் சமபாலீர்ப்பினர், ஈரர் மற்றும் திருநர் ஆகியோரின் உரிமைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். இது ஒரு மானிடத்தேவை அன்று, இது வருங்கால சந்ததி உருவாக்கத்திற்கு பாதகமாக அமையும். விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறிந்த விடயம் என்னவென்றால் இவ்வாறான உணர்வுகள் ஏற்படுவது என்பது கடின மன அழுத்தத்தினால் ஆகும். மனித மனம் கடுமையான மனஅழுத்தத்திற்கு அல்லது அவ்வாறான சூழ்நிலையில் வாழும்Continue reading ம.வி.மு (பா.உ) நலிந்த ஜயதிஸ்ஸ சமபாலீர்ப்பு மீது கொண்ட வெறுப்புணர்வு