சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக

ஆணாதிக்கத்தின் அருவருப்பொலியையும்  எதிர்பாலினர் சார் கட்டாய பாலியல் நாட்டம் போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவற்றுக்கு மேலாக எழுந்து செயற்படல் ஒவ்வொரு பெண்ணினதும் சத்திய மந்திரமாக இருக்க வேண்டும், அவர்கள் இளம் வயதினராக இருந்தாலும் சரி அல்லாது பழைமையானோராயினும் சரி. கண்ணாடிக் கூரைகளை உடைத்தெழுந்து செயற்படும் இன்றைய பெண்களை நாம் கொண்டாடும் அதே வேளையில், சமூக மற்றும் காலாச்சாரவிதிமுறைகள்காரணத்தினால் ஆணாதிக்கம் மற்றும்  எதிர்பாலினர் சார் கட்டாய பாலியல் நாட்டம் போன்ற காரணிகளினால் பறப்பதற்கு ஆவலாயிருந்தும் தமது சிறகுகள் முடக்கப்பட்டுள்ள இப்பெண்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இப்பெண்கள் மௌனமான, மறந்துவிடப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட சிறுபான்மையினராக காணப்படுகின்றனர் –  இந்நாட்டின் பெண்  ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பால்சேர்க்கையாளர்கள் மற்றும் மாற்றுப் பால் இனத்தவர்.

இலங்கையில் உள்ள பெண்கள், அவர்களுக்கு நியாயமற்ற சமூகப் பெறுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு துடிப்பான மற்றும் நியாயமான சமுதாயத்தை கட்டியெழுப்பதில் பெரிதும் பங்களிப்பு செய்கின்றனர். அவர்கள் எம் தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள், நண்பர்கள் மற்றும் மனைவிகள். அவர்கள் வைத்த்தியர்கள், பொறியளார்கள், விமானிகள் மற்றும் அவற்றிற்கும் மேலாக இருக்கின்றனர். ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளராக, இரு பால்சேர்க்கையாளராக அல்லது மாற்றுப் பால் இனத்தவராக இருப்பது அவர்களை நாள்தோறும் ஓரங்கட்டப்பட்டு மதிப்பிழக்கப்படச் செயகின்றது. எனினும் நாம், ஒரு சமுதாயமாக, துரதிருஷ்டவசமாக, அவர்களின் விதிகளைத் சரிபடுத்தாமல் அக்கறையில்லாமல் காணப்படுகின்றோம்.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பெண்கள் இல்லாமல் ஒரு சமூகம்  முழுமையடைய மாட்டாது என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். நாம் எல்லோரும் எமது வாழ்க்கையில் உள்ள  பெண்களுக்காக எழுந்து நிற்க வேண்டும், அவர்கள் பெண் ஓரினச்சேர்க்கையாளராக, இரு பால்சேர்க்கையாளராக அல்லது மாற்றுப் பால் இனத்தவராக, அல்லது எவ்வாறிருப்பினும் சரி. நாம் அவர்களின் சாதனைகள், கதைகள், வெற்றிப் பயணங்களைக் கொண்டாட வேண்டும். அனைத்து பாலியல் நாட்டங்களும் உள்ளடங்கும் பெண்களாகிய நாம், எமது குரல் கேட்கப்படும் முகமாக மதிப்பு வாய்ந்ததாக கருதப்படும் வகையில்  செயற்பட வேண்டும்.

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, இன்று நாம் வெற்றிகரமான பெண்கள் கதைத் தொடரின் முதல் 2 தொடர் பதிவுகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர்கொண்ட போதிலும், ஆணாதிக்கம், ஓரினச்சேர்க்கையாளர் மீதான வெறுப்பு போன்ற தடங்கல் நிரம்பிய பாதையைக் கடந்து அவர்களுக்காக தொழில் செய்து செயற்பட்டு, வெற்றிகரமான பெண்களாக உயர்ந்து காணப்படுகின்றனர்!

Screenshot (133)

Screenshot (128)

Published by

Leave a Reply