Zonta Women of Achievement 2017 – சமூக தாக்கத்திற்கான விருது LGBTIQ சமூகத்தை அங்கீகரித்து இனங்காணல்

EQUAL GROUND அமைப்பானது எமது நிர்வாக இயக்குனரான ரோசனா பிளேமர் கல்தேர (Rosanna Flamer-Caldera) சமூக தாக்கத்திற்கான Zonta சாதனைக்கான பெண்கள் விருதை 17 செப்டம்பர் 2017 ஆம் திகதி ஞாயிறு இரவு சின்மோனன் கிராண்ட் ஹோட்டலில் (Cinnamon Grand Hotel) பெற்றார் என்பதை அறிவிப்பதில் பெருமையடைகின்றது. 1985 ஆம் ஆண்டிலிருந்து, கொழும்பிலுள்ள ஸொன்தா குழு 1 (Zonta Club 1) ஆனது, தமது துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் தேசிய முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்துள்ள பெண்களை சிறப்பித்து கொண்டாடுகின்றது.

விருதை பெறுவதுடன் ரோஸானா அவர்கள் “இது வெறுமனே எனக்குரிய வெற்றி அல்ல, கடந்த பதினேழு ஆண்டுகள் நான் செய்த வேலைக்குரிய வெற்றி அல்ல, ஆனால் LGBTIQ சமூகம் சமுதாயத்தில் ஒரு முக்கியமான அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவது எனது தொழில் வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆகும், இந்த நாட்டில் ஓரங்கட்டப்பட்ட ஏனைய குழுக்களைப் போலவே நமது சமூகத்தின் பிரச்சினைகளும் மிக முக்கியம் என்பதை இது உறுதிப்படுத்துகின்றன” என தனது கருத்தை வெளியிட்டார்.”

Zonta1.jpg

ரோசன்னா மற்றும் ஈக்வாள் கிரவுண்ட் (EQUAL GROUND) செயற்பாட்டின் காரணமாக, LGBTIQ சமூகம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சைக்குரியதாக கருதப்படக்கூடிய அங்கீகாரத்தை இன்று சுமூகமாகப் பெற்றுள்ளது. நாங்கள் இப்போது சிறிய ஆனால் நிச்சயமான மாற்றத்தை காண்கின்றோம். வணிகங்கள் மற்றும் பிரதான சமுதாயமானது LGBTIQ சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளவும் ஆதரவளிக்கவும் வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன.

விருதை பெறுவதுடன் ரோஸானா அவர்கள் இத்தனையும் குறிப்பிட்டார்;
“நான் ஒவ்வொரு LGBTIQ நபருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கின்றேன். மேலும் எவ்வகையான வாய்மொழி, உடல் அல்லது உணர்ச்சி துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு கூறுகிறேன்; நிமிர்ந்து நில்லுங்கள், யாருக்கும் அடிப்பட்டு நடக்காதீர்கள், நீங்கள் செல்லும் பாதையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்கள் எப்போதும் உள்ளன. உங்கள் உலகம் பற்றிக்கொண்டிருப்பதனால், நீங்கள் உதவியற்றவர்களாக உணர்ந்தவர்களானாலும் அச்சூழ்நிலையை மட்டுமே உள்ளது. உங்கள் மீது அறியப்படுகின்ற ஒவ்வொரு கல்லையும் எடுத்துக் கொண்டு, உங்கள் அரண்மனையை கட்டிக்கொள்ளுங்கள். அதனையே நான் ஒவ்வொரு நாளும் செய்தேன், தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்!”

6G9A0955

6G9A0586

Published by

Leave a Reply