ம.வி.மு (பா.உ) நலிந்த ஜயதிஸ்ஸ சமபாலீர்ப்பு மீது கொண்ட வெறுப்புணர்வு

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் ஓர் நேர்காணலில் ‘‘நான் முற்றிலும் சமபாலீர்ப்பினர், ஈரர் மற்றும் திருநர் ஆகியோரின் உரிமைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். இது ஒரு மானிடத்தேவை அன்று, இது வருங்கால சந்ததி உருவாக்கத்திற்கு பாதகமாக அமையும். விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறிந்த விடயம் என்னவென்றால் இவ்வாறான உணர்வுகள் ஏற்படுவது என்பது கடின மன அழுத்தத்தினால் ஆகும். மனித மனம் கடுமையான மனஅழுத்தத்திற்கு அல்லது அவ்வாறான சூழ்நிலையில் வாழும் போது இவ்வகையான அசாதாரண உணர்வுகள் ஏற்படுகின்றது . உதாரணமாக மனிதர் காட்டில் வாழ்ந்த போது இவ்வகையான நடத்தை காணப்படவில்லை சிறையில் அடைக்கப்படும் போது இவை அவதானிக்கப்படலாம். நான் ஆண் , பெண் இடையிலான திருமணத்தையே நம்புகின்றேன். சம பாலீர்ப்பு திருமணங்கள் அசாதாரணமானவையாகவே கருதுகின்றேன். இது மனித பரிமாண வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தும்’‘ என்று தெரிவித்திருந்தார்.

இது இடது சாரிக்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திகாட்டிக்கொள்ளும் இலங்கையின் மக்களின் சமத்துவத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை உருவமா? ஈகுவல் க்ரவுண்ட்ஸ் (Equal ground) அமைப்பு வைத்தியர் ஜயதிஸ்ஸவின் இந்த வெறுப்புணர்வு கொண்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்தக்கூற்றுத்தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்து என்ன என்பதனை இலங்கையின் சமபாலீர்பினர், ஈரர், திருநர், இடையிலிங்கத்தோர் மற்றும் பாலீர்ப்பு தொடர்பில் கேள்விகளுடன் வாழ்வோர் சார்பில் கேட்டு அதற்கான பதிலை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

67

68

Published by

Leave a Reply